2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் : பிரதமர் மோடி ஆலோசனை
- 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
- பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 % குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்நிலையில் 2020-2021-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.