மத்திய பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று நிதியமைச்சகத்தில் அல்வா நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மக்களவையில் 2021- 22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்த விளக்க உரை இரண்டு அமர்வுகளில் நடைபெறும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, ஜன. 29 முதல் பிப்ரவரி 15 வரை மற்றும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டு பகுதிகளாக நடைபெற உள்ளது.
சமீபத்தில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் இம்மாதம் 29-ஆம் தேதி கூட இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று நிதியமைச்சகத்தில் அல்வா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விநியோகித்தார்.
பட்ஜெட் தாக்கலாகும் முன் அல்வா சமைத்து விநியோகிப்பது நிதியமைச்சகத்தில் உள்ள வழக்கமான நடைமுறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…