பட்ஜெட் 2025 : விவசாயிகளுக்கான சிறப்பு அறிவிப்புகள்..!
2025 மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய அம்சங்களை மனதில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் கூறினார். அதில், பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, இளைஞர்கள் நலன், உணவு உத்தரவாதம், வேளாண் வளர்ச்சி ஆகியவற்றிற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதில், வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் கூட்டணியாக புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிய வேளாண் திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன் பெற உள்ளனர். பருப்பு வகை தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய 6 ஆண்டு காலத்திற்கான புதிய திட்டமும், மற்றும் அதிக மகசூல் தரும் தானியங்கள் தொடர்பாக புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேலும், விவசாயிகள், மீனவர்கள் கடனுதவி பெறும் வகையில் ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். அந்த கிசான் கிரெடிட் கார்ட் மூலம் கிசான் கடன் அட்டைகள் மூலம் 7.7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு வழங்கும் கடன் உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் விவசாயிகள் ரூ.5 லட்சம் வரை கடன் பெற முடியும் எனவும், முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 லட்சம் விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிகார் மாநிலத்திற்கு தாமரை விதைகள் உற்பத்திக்கு தனி வாரியாம் அமைக்கப்படும்.
மேலும், அசாமில் யூரியா உற்பத்தி மையம் அமைக்கப்படும். தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தார். கிராமப்புற தபால் நிலையங்கள் அமைக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய வேளாண் திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெற உள்ளனர் என்றார்.