Budget 2024: சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சாரம்!

Budget 2024 - solar

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய சீதாராமன்,  வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் மூலம் மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற முடியும் என்றார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதில், வீடுகளில் மின் உற்பத்தி செய்யும் முயற்சியில், மேற்கூரை சோலாரைசேஷன் மற்றும் இலவச மின்சாரத்தை பிரபலப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதன்படி, ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த இலவச சூரிய மின்சாரம், மின் விநியோக நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் குடும்பங்கள் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சேமிக்க முடியும் என்றார்.

ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம்-நிர்மலா சீதாராமன்.!

கடந்த மாதம், பிரதான்மந்திரி சுரோதயா யோஜனா திட்டத்தின் கீழ், ஒரு கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தியை நிறுவும் மத்திய அரசின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இத்திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நபர்களுக்கு சூரிய மின் கூரை நிறுவல் மூலம் மின்சாரம் வழங்குவதையும், உபரி மின்சார உற்பத்திக்கு கூடுதல் வருமானத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்