பட்ஜெட் 2024..! வேளாண் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு
பிப்ரவரி 1ஆம் தேதி (நாளை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், தற்போது தாக்கல் செய்யப்படுவது இடைக்கால பட்ஜெட் ஆகும். இதில் முக்கியமாக வேளாண் பட்ஜெட்டில் எது மாதிரியான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயத் துறையானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிக ஒதுக்கீட்டை எதிர்பார்க்கும் அதே வேளையில், நீர்ப்பாசனத்திற்கான மூலோபாய முதலீடுகளும் ஒரு முக்கிய கோரிக்கையாக உள்ளது. அடுத்த நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு 22-25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் அரசின் நிறுவனங்கள் மூலம் கடன் கிடைப்பதை உறுதிசெய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா! அமலாக்கத்துறை கைது செய்ததாக தகவல்
விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள், வரி நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே சமயத்தில், விவசாய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் தொடரும் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.