பட்ஜெட் 2022: ஹோம் வொர்க் செய்யாமல் விமர்சனம் செய்யக்கூடாது- நிதியமைச்சர் பதிலடி ..!

Published by
Castro Murugan

ராகுல் காந்தி கருத்துக்கு பதிலளித்த  மத்திய நிதியமைச்சர்  சரியான ஹோம் வொர்க் செய்யாமல் விமர்சனம் செய்யக்கூடாது என்று கூறினார்.

நேற்று நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ராகுல் காந்தி விமர்சித்தார். இந்த பட்ஜெட்டில் சம்பளம் வாங்கும் வகுப்பினர், நடுத்தர மக்கள், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்களுக்கு என்று எதுவும் இல்லை என்று இது  “ஜீரோ பட்ஜெட்”  மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக  ராகுல் காந்தி தெரிவித்தார்.

பட்ஜெட் குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் “ஜீரோ பட்ஜெட்” குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்களை அவர் மறுத்தார்.  முதலில் பட்ஜெட்டைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.  பட்ஜெட்டை முழுமையாக புரிந்து கொண்டு, விமர்சித்தால் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும். சரியான ஹோம் வொர்க் செய்யாமல் விமர்சனம் செய்யக்கூடாது என்றும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புரிந்து கொள்ளாமல் ராகுல் காந்தி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ராகுல் காந்தி எதைப் பிரச்சாரம் செய்கிறாரோ..? அதை அவரது கட்சி ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். பஞ்சாபில் வேலை வாய்ப்பு நன்றாக உள்ளதா.? இன்றும் மகாராஷ்டிராவில் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதைத் தடுக்க ராகுல் காந்தி செயல்படுகிறாரா..? எனவே அவர் எந்த விஷயத்திலும் பேசுவதற்கு முன் அவர் முதலில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் பற்றி பேச வேண்டும். அதன் பிறகு பாஜகவுடன் பேச வேண்டும் என்றும் சீதாராமன் கூறினார்.

Recent Posts

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

12 minutes ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

58 minutes ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

2 hours ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

3 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

3 hours ago