பட்ஜெட் 2022: ஹோம் வொர்க் செய்யாமல் விமர்சனம் செய்யக்கூடாது- நிதியமைச்சர் பதிலடி ..!
ராகுல் காந்தி கருத்துக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் சரியான ஹோம் வொர்க் செய்யாமல் விமர்சனம் செய்யக்கூடாது என்று கூறினார்.
நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ராகுல் காந்தி விமர்சித்தார். இந்த பட்ஜெட்டில் சம்பளம் வாங்கும் வகுப்பினர், நடுத்தர மக்கள், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்களுக்கு என்று எதுவும் இல்லை என்று இது “ஜீரோ பட்ஜெட்” மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
M0di G0vernment’s Zer0 Sum Budget!
Nothing for
– Salaried class
– Middle class
– The poor & deprived
– Youth
– Farmers
– MSMEs— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2022
பட்ஜெட் குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் “ஜீரோ பட்ஜெட்” குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்களை அவர் மறுத்தார். முதலில் பட்ஜெட்டைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பட்ஜெட்டை முழுமையாக புரிந்து கொண்டு, விமர்சித்தால் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும். சரியான ஹோம் வொர்க் செய்யாமல் விமர்சனம் செய்யக்கூடாது என்றும் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புரிந்து கொள்ளாமல் ராகுல் காந்தி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ராகுல் காந்தி எதைப் பிரச்சாரம் செய்கிறாரோ..? அதை அவரது கட்சி ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். பஞ்சாபில் வேலை வாய்ப்பு நன்றாக உள்ளதா.? இன்றும் மகாராஷ்டிராவில் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதைத் தடுக்க ராகுல் காந்தி செயல்படுகிறாரா..? எனவே அவர் எந்த விஷயத்திலும் பேசுவதற்கு முன் அவர் முதலில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் பற்றி பேச வேண்டும். அதன் பிறகு பாஜகவுடன் பேச வேண்டும் என்றும் சீதாராமன் கூறினார்.