2018ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் உரை!முழு விபரம் இதோ…..

Default Image

2018ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகியது. இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற மரபுப்படி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து படை வீரர்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அங்கு அவரை பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பொருளாதார சமூக ஜனநாயகம் இல்லாமல் ஜனநாயகம் முழுமையடையாது என்ற அம்பேத்கரின் கருத்தை சுட்டிக் காட்டி பேசினார்.
Image result for ram nath kovind budget
நாடு முழுவதும் கல்வித்துறையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய குடியரசுத் தலைவர், குறைந்த செலவில் மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார். முத்தலாம் மசோதா விரைவில் சட்டமாகும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். முன்னதாக அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து மரபுப்படி குதிரை வீரர்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார்.
நாடு முழுவதும் கல்வித்துறையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய குடியரசுத் தலைவர், குறைந்த செலவில் மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்ட அவர், சந்தேகத்திற்கிடமான 3 லட்சத்து 50 ஆயிரம் கம்பெனிகளின் பதிவு கடந்த ஓராண்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
Image result for ram nath kovind budget
சுதந்திரத்திற்குப் பிறகு, 76 விமான நிலையங்கள் மட்டுமே வர்த்தக அடிப்படையில் விமானப்போக்குவரத்தால் இணைக்கப்பட்டன என்று கூறிய ராம்நாத் கோவிந்த், உடான் திட்டத்தின் கீழ் 15 மாதங்களில் 56 விமான நிலையங்கள், 31 ஹெலிபேடுகள் வர்த்தக அடிப்படையில் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்றார். ஏழைகள் உரிமைகளைப்பெற ஆதார் உதவியிருப்பதாகக் கூறிய குடியரசுத் தலைவர், டிஜிட்டல் முறை பரிவர்த்தனையால் தவறான நபர்களுக்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் சென்று சேர்வது தடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
யுனெஸ்கோ பட்டியலில் கும்பமேளா, அகமதாபாத், சென்னை இணைந்தது குறித்து குடியரசுத் தலைவர் பெருமிதம் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டில் 56 சதவீத கிராமங்கள் மட்டுமே சாலைவசதியுடன் இணைப்பை பெற்றிருந்தன என்றும், இன்று 82 சதவீதத்திற்கும் அதிக கிராமங்கள் சாலை இணைப்பைப் பெற்றுள்ளன என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். முஸ்லிம் பெண்கள் கண்ணியத்துடன், அச்சமின்றி வாழ, முத்தலாக் மசோதா விரைவில் சட்டமாகும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், 2.5 லட்சம் பஞ்சாயத்துகள் ஏற்கெனவே பிராட்பேண்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளன என்றும் ராம்நாத் கோவிந்த் கூறினார். ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 26 வாரங்களாக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். முழுத்தூய்மை அடைந்த நாடாக, 2019ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டியது நம் கடமை என்றும் குடியரசுத் தலைவர் அவரது உரையில்  கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
plane crashed in Kazakhstan
Pakistan airstrikes in Afghanistan
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai