ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்கிறது. இங்குள்ள பிரபல புரி ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் தான் இந்த வியக்க வைக்கும் நிகழ்வு அரங்கறியுள்ளது. புரி ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் பிச்சை எடுப்பவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா. இவர் வழக்கமாக தினமும் பிச்சை எடுக்கும் இடத்தில், ஒரு ரிக்ஷாக்காரர் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். இந்த இடத்தில் தினமும் பிச்சை எடுத்து வருவது குறித்த வாய் வார்த்தையில் தொடங்கி, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்த்தகராறு, சிறிது நேரத்தில் அடிதடியாக மாறியது. இதில் அந்த பிச்சைக்காரர் தாக்கியதில், ரிக்ஷாக்காரருக்கு பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. இந்த சம்வம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது இருவரிடமும் புகார் மனு தருமாறு காவல்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
அப்போது அந்த பிச்சைக்காரர் கிரிஜா சங்கர் மிஸ்ரா, சட சட என அருமையாக ஆங்கிலத்தில் சரளமாக தனது புகார் மனுவை எழுதினார். அதைப் பார்த்த காவல்துறையினர் ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து, அவரிடம் தோண்டித் துருவி விசாரணை நடத்தினர். அப்போதுதான், அந்த பிச்சைகாரரின் உண்மையான நிலை மற்றும் அவரது பின்னணி தெரியவந்துள்ளது. இந்த பிச்சைகாரர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளரின் மகன் தான் இந்த பிச்சைகாரர் என்பதும் இவர் ஒரு பி.டெக். பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இவர் தனது படிப்பை முடித்த சில ஆண்டுகளிலேயே மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வீட்டிலிருந்து வெளியேறி புரி ஜெகநாதர் கோவிலுக்கு வந்து பிச்சை எடுத்து வந்தார் என்பதையும் காவல்துறையினர் தெரிந்துகொண்டனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினரை கண்டறிந்து இவரை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…