கடந்த சில மாதங்களாகவே பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் எம்டிஎன்எல் (MTNL) நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.இதனை ஈடு செய்யும் விதமாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி நவம்பர் 4-ஆம் தேதி முதல் ஊழியர்கள் விருப்ப ஒய்வு பெற திட்டம் தொடங்கப்பட்டது.நேற்றுடன் இதற்கான திட்டம் முடிவடைந்தது. இந்த விருப்ப ஒய்வு திட்டத்தின் படி கிட்டத்தட்ட 92700 ஊழியர்களுக்கு மேல் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளனர். பிஎஸ்என்எல் (BSNL) 78300 ஊழியர்களும்,எம்டிஎன்எல் (MTNL) 14378 ஊழியர்களும் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளனர்.
விருப்ப ஓய்வு குறித்து பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் சேர்மன் பி.கே.புர்வார் (P K Purwar) ,விருப்ப ஓய்வு திட்டத்தின் முடிவில் சுமார் 78300 ஊழியர்கள் ஓய்வு பெற முடிவு செய்துள்ளனர்.ஆனால் நாங்கள் 82000 ஊழியர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்த்தோம்.விருப்ப ஓய்வை தவிர ஏற்கனவே 6000 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
இது குறித்து எம்டிஎன்எல் (MTNL) நிறுவனத்தின் சேர்மன் சுனில் குமார் கூறுகையில்,ஓய்வு காரணமாக சம்பளத்திற்கான ஆண்டு செலவு ரூ.2272 கோடியில் இருந்து ரூ.500 கோடியாக குறையும்.இப்போது எங்களிடம் 4430 ஊழியர்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…