நிதிநெருக்கடியில் பிஎஸ்என்எல் நிறுவனம்! மத்திய அரசு கைகொடுக்குமா?
பிஎஸ்என்எல் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிதி நெருக்கடியின் காரணமாக, அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை கூட கொடுக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த நிறுவனம் ஜூன் மாத ஊதியம் கொடுக்கவும், இந்நிறுவனம் தொடர்ந்து இயங்கவும் உடனடியாக 850 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், இந்நிறுவனம் தொடர்ந்து சீராக இயங்குவதற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிதிநெருக்கடியின் காரணமாக வேலையாட்களுக்கு ஜூன் மாத சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படலாம்.