ஜனவரியில் இருந்து 78,569 பேர் விடுவிப்பு….! தகவலை வெளியிட்ட BSNL..!

Default Image
  • 78,569 BSNL ஊழியர்கள் சுய விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தவர்கள் ஜனவரி மாதத்தில் விடுவிப்பு என்று BSNL  தெரிவித்துள்ளது.
  • 1300 கோடியை சேமிக்க முடியும்  என்று BSNL தலைவர்  தகவல்

BSNL நிறுவனத்தின்  78,569 ஊழியர்கள் சுய விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம் அளித்திருக்கின்றனர் என்று BSNL தலைவர்  மற்றும் நிர்வாக இயக்குநர்  பி.கே புர்வார் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் சுய விருப்ப ஓய்வுக்கு 78,569 பேர் விண்ணபித்துள்ளனர். விண்ணப்பித்த அனைவரும் வரும் ஜனவரியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.அதன்படி 78,569 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.இதனால் நடப்பு  நிதியாண்டில் ஊதியம் மற்றும் இதர படிகள் என 13 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் BSNL -லை மற்றொரு அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிகாம் உடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்க உள்ளது என்ற கூடுதல் தகவல்களையும் தெரிவித்தார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்