BSNL-ஐ தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்தது ஏர்டெல்.!
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் கடைகள் திறந்திருக்கின்றன.
இதனை பொருட்டு அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளித்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை இன்கமிங் கால் இலவசம் எனவும், 10 ருபாய் இலவச டாக்டைமும் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் துணை நிறுவனமான எம்டிஎன்எல் நிறுவனமும் இந்த சலுகையை தெரிவித்துள்ளது.
இதேபோல, ஏர்டெல் நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான சலுகைகளை வழங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 17ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் இலவசம் எனவும், ரூ.10 டாக் டைம் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.