இன்று தொடங்குகிறது பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டின் கவுன்டவுன்!
பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவ கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது. ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 9 மணி 28 நிமிடங்களில் ராக்கெட் ஏவப்பட உள்ள நிலையில், 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்குகிறது..
இந்தியாவின் 100வது செயற்கைக் கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்குகிறது. இந்த ராக்கெட் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன.
மேலும் இந்தியா சார்பில் 710 கிலோ எடை கொண்ட கார்டோசாட்-2 , 100 கிலோ எடை கொண்ட மைக்ரோ சாட்டிலைட் மற்றும் 5 கிலோ எடை கொண்ட மிகச்சிறிய நானோ சாட்டிலைட் ஆகியவையும் விண்ணில் அனுப்பப்பட உள்ளன. ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 9 மணி 28 நிமிடங்களில் ராக்கெட் ஏவப்பட உள்ள நிலையில், 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்குகிறது..
source: dinasuvadu.com