நவம்பர் மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் தென்னிந்திய மாநிலத்தில் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலும் ஒன்று. இது பாஜகவுக்கு முக்கியமான தேர்தலும் கூட. கடைசியாக கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பின்னர், தென்னிந்தியாவில் முற்றிலும் சட்டப்பேரவை ஆட்சியை இழந்த தேசிய கட்சியாக பாஜக மாறிவிட்டது.
அதனால், வரும் தெலுங்கானா தேர்தலில் முதன்முறையாக ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. அதே போல கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய தெம்புடன் , எதிர்க்கட்சியாக தெலுங்கானாவில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கூடுதல் நம்பிக்கையுடன் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது.
மக்களவை தொகுதி பங்கீடு தொடர்பாக தற்போது எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.! கார்கே திட்டவட்டம்.!
தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்தது முதல் ஆட்சியை இருமுறை கைப்பற்றியுள்ள சந்திரசேகர ராவ்வின் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக வேலை செய்து வருகிறது.
இது தேர்தல் சமயம் என்பதால் தேர்தல் பரப்புரைகள், விவாத மேடைகள் என தெலுங்கானா அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் ஆளும் கட்சி எம்எல்ஏ மற்றும் பாஜக தேர்தல் வேட்பாளர் பேசி கொண்டு இருக்கும் போது வாதங்கள் முற்றி அது கைகலப்பாக மாறிவிட்டது.
ஆளும் பிஆர்எஸ் கட்சியின் குத்புல்லாபூர் தொகுதி எம்எல்ஏவும், அத்தொகுதி வேட்பாளருமான கே.பி.விவேகானந்த கவுட் மற்றும் பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுட் ஆகியோர் ஓர் தனியார் தொலைக்காட்சி விவாத மேடையில் கலந்துகொண்டனர்.
அப்போது கடுமையான வாதங்கள் இரு தரப்பில் இருக்கும் முன்வைக்கப்பட்டது. அப்போது வட மாநில டெலிவரி இளைஞரை தெலுங்கு பேசவில்லை என கூறி ஆளும் கட்சி ஆட்கள் தாக்கியதாக பாஜக வேட்பாளர் குற்றம் சாட்டியதாக தெரிகிறது.
இந்த வாக்குவாதத்தில் தான் பேச்சுவார்த்தையில் இருந்த விவாத நிகழ்ச்சி கைகலப்பாக மாறியது. இதனை சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர். நேரடி விவாத மேடையில் நடைபெற்ற இந்த தக்குதல் சம்பவம் விறுவிறுவென தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரவி பரபரப்பாக பேசப்படுகிறது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…