முறிந்தது அகிலேஷ் ,மாயாவதி கூட்டணி! மாயாவதி திடீர் முடிவு
உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பாஜக -விற்க்கு எதிராக போட்டியிடப்போவதாக அறிவித்தனர்.இதனால் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.அதன்படி இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலை சந்தித்தது.ஆனால் எதிர்பார்த்த வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைக்கவில்லை.
இதற்கு ஏற்ற வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார்.மேலும் தனித்துப் போட்டியிட்டாலும் அகிலேஷ் உடனான நட்பு தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.