முதல் முறையாக…இன்று இந்தியாவுக்கு வருகை புரியும் பிரிட்டன் பிரதமர் போரிஸ்!

பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் முறையாக இந்தியா வருகிறார்.
பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் இன்று முதல்முறையாக இந்தியா வருகிறார்.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில்,கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்திருந்தார்.தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் இன்று மற்றும் நாளை அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகிறார்.
அதன்படி,பிரதமர் ஜான்சனின் இரண்டு நாள் பயணம் குஜராத்தில் தொடங்கவுள்ளது.இதனையடுத்து,பிரிட்டன் பிரதமர் போரிஸ் நாளை (ஏப்ரல் 22ஆம் தேதி) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்தியா- பிரிட்டன் இடையே பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ரீதியான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும்,உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்தும்,இந்தியாவை பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாற்றும் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கு குறித்தும்,ராணுவ வன்பொருள் கூட்டுத் தயாரிப்பிற்கான தொழில்நுட்பங்களை மாற்றுவதற்கும் இங்கிலாந்து தனது ஒத்துழைப்பை நீட்டிப்பது குறித்தும் இரு நாட்டு பிரதமர்களும் பேசவுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதனிடையே,கடந்த 2014 ஆம் ஆண்டு பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சராக போரிஸ் இருந்தபோது இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025