இந்தியா வந்தடைந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.அதன்படி,குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இதனையடுத்து, குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்சிகளில் போரிஸ் ஜான்சன் பங்கேற்கிறார்.
இதனையடுத்து,பிரிட்டன் பிரதமர் போரிஸ் நாளை (ஏப்ரல் 22ஆம் தேதி) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்தியா- பிரிட்டன் இடையே பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ரீதியான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் இன்று முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.குறிப்பாக,குஜராத் மாநிலத்துக்கு வந்த முதல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
UK PM Boris* Johnson arrives in Ahmedabad, Gujarat. He is on a 2-day India visit pic.twitter.com/yzwlX5Dppg
— ANI (@ANI) April 21, 2022