பிரிக்ஸ் உச்சி மாநாடு – பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
ரஷ்யா தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ,பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது . தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றது . ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றது.
உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நடப்பாண்டிற்கான 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று (நவம்பர் 17-ஆம் தேதி )நடைபெறுகிறது.காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாடு, ரஷ்யா தலைமையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.