நாடு திரும்பிய மோடி… சீன அதிபருடன் சந்திப்பு! பிரிக்ஸ் மாநாட்டின் ஹைலட்ஸ்…

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி தாயகம் திரும்பினார்.

BRICS leaders

டெல்லி : பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார்.  நேற்று முன் தினம் ரஷ்யாவில் 16ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

அதன்படி, ரஷ்யாவில் இருந்து இன்று அதிகாலை டெல்லிக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. 10 வருடத்திற்கு முன்பு பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தற்போது 2024 ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கடலந்து கொண்டார்.

இந்த மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் ஈரான் அதிபர் மசூத் ஆகியோருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ரஷ்யா – உக்ரைன் போர், தீவிரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு இன்று அதிகாலை இந்தியா திரும்பினார். முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மோடி, மாநாடு ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக கூறியிருந்தார்.

பிரிக்ஸ்

பிரிக்ஸ் அமைப்பு 2009-ல் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு உருவாகும்போது, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் மட்டும் இருந்தன. பிறகு தெ.ஆப்பிரிக்கா இணைந்தது. அந்நாடுகளின் பெயரிலுள்ள முதல் எழுத்துகளை வைத்தே பிரிக்ஸ் (BRICS) என அழைக்கப்பட்டது.

தற்போது ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியா, யுஏஇ ஆகிய நாடுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சில நாடுகளும் உறுப்பினராக விண்ணப்பித்துள்ளன குறிப்பிடத்தக்கது.

வைரல் புகைப்படம்

பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒற்றை புகைப்படம் மூலம், ஒட்டுமொத்த உலகையும் ரஷ்யா திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்திய பிரதமர் மோடியையும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் தனது இருபுறமும் நிற்க வைத்து, விளாதிமிர் பூட்டின் மாஸ் காட்டி இருக்கிறார். ஆசியாவின் இருபெரும் அரசுகள் ஒன்றிணைந்து மேற்கத்திய நாடுகளை அதிர வைத்திருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தீவிரவாதத்தில் இதற்கு இடமில்லை

ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் நேற்று, தொழில்துறை தலைவர்கள் மத்தியில் பேசிய அவர், தீவிரவாதத்திற்கான நிதி உதவியை எதிர்த்து நாம் ஒற்றுமையுடன் செயல்பட அழைப்பு விடுத்தார். தீவிரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், சர்வதேச தீவிரவாதம் தொடர்பான விரிவான பிரச்சனை ஐநா சபையில் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

போரை ஆதரிக்க மாட்டோம்

இந்தியா எப்போதும் போரை ஆதரிக்காது என பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியான உறவை ஆதரிக்கிறோம். போர்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் எனவும், சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் மோடி உரை

  • எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீா்வையே இந்தியா ஆதரிக்கும். மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது.
  • பருவநிலை மாற்றம் என்பது நமது பொதுவான முன்னுரிமையாக உள்ளது. ரஷ்யாவின் தலைமையில் பிரிக்ஸ் திறந்த கார்பன் சந்தை ஒத்துழைப்புத் தொடர்பாக எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை இந்தியா வரவேற்கிறது.
  • பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே சரக்கு போக்குவரத்தையும் விநியோகச் சங்கிலி இணைப்பையும் அதிகரிப்பதில் இந்தியா மேற்கொண்டுள்ள ரயில்வே ஆராய்ச்சி கட்டமைப்பு முன்முயற்சியானது முக்கிய பங்கை வகிக்கிறது.
  • இந்த அனைத்து முன்முயற்சிகளுக்கும் இடையே, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் நலன்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
  • 2021-ம் ஆண்டில் இந்தியா தலைமையில் முன்மொழியப்பட்ட பிரிக்ஸ் புத்தொழில் அமைப்பு இந்த ஆண்டு தொடங்கப்படும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியா – சீனா சந்திப்பு

ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தின. இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய – சீன உறவு என்பது இருநாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டார். மேலும், சீன அதிபர் ஜின்பிங்குடன் எல்லை விவகாரம், வர்த்தகம் தொடர்பாகவும் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த 2019 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, இருநாட்டு தலைவர்கள் இடையே நடைபெறும் முதல் இரு தரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் மோதி எக்ஸ் பக்கத்தில், “கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தேன். இந்தியா- சீனா உறவுகள் நமது நாட்டு மக்களுக்கும், இந்த பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியமானது. பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்வுகள் ஆகியவை இந்த இருதரப்பு உறவுகளை வழிநடத்தும்”, என்று அவர் பதிவிட்டார்.

நன்றி தெரிவித்த மோடி

கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பல்வேறு பிரச்னைகளை விவாதிக்கவும், பல உலக தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்