சசிகலா அவர்கள், பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தோழியான சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று காலை இவருக்கு காய்ச்சல் காரணமாக லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவருக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு இவருக்கு சிகிச்சையளித்தது.
இந்நிலையில், நேற்று மாலை இவருக்கு காய்ச்ச்ல் மற்றும் மூச்சு திணறல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து இவர், பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் இருந்த கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இல்லை என முடிவுகள் வெளியானது. இதனையடுத்து, இவருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததையடுத்து, அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் மீண்டும் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில், சசிகலாவை காண அவரது உறவினர்கள் கூடியுள்ளனர். சசிகலாவை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இவருக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், சசிகலாவின் உடல்நிலை குறைத்த தற்போதைய நிலையை தெளிவுபடுத்துமாறு உறவினர்கள் வலியறுத்தியுள்ளனர். ஆனால், சசிகலாவின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இவர் வரும் 27-ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…