மாசு கலந்த காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்-ஆய்வில் தகவல் ..!
டெல்லியில் கடந்த ஒரு மாதமாகவே காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.அங்கு உள்ள காற்று மாசு போக்க டெல்லி அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல விதிமுறைகளையும் விதித்துள்ளது.
குறிப்பாக வாகனங்கள் இயக்குவதற்கு சில கட்டுப்பாடுகளையும் டெல்லி அரசு விதித்தது. அதேபோல டெல்லியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயிகள் கழிவுகளை ஏறிக்க கூடாது என் கூறியுள்ளது.
இந்நிலையில் மாசு கலந்த காற்றை சுவாசிப்பதால் உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உயிரியல் பரிசோதனைக்காக அமெரிக்கா சங்கத்தின் கூட்டமைப்பு எலியை வைத்து ஆய்வு செய்தனர். அதில் மாசுபட்ட காற்று மனிதர்கள் சுவாசிப்பதால் நுரையீரலையும் , இதயத்தையும் பாதிக்கிறது.
இதனால் ஆஸ்துமா, சுவாச கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு வாரங்கள் மாசு கலந்த காற்றை சுவாசித்தால் எல்டிஎல் கொழுப்பின் அளவு 50 சதவீதம் அதிகரித்து உடல் எடை அதிகரிக்கும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.