ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி நிறுவிய மார்பக புற்றுநோய் சிகிச்சை மையம்!

Default Image

நேற்று உலகம் முழுவதும் உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவரான நீடா அம்பானி அவர்கள் மார்பகப் புற்றுநோய் பிரச்சினைகளுக்கான ஒன் ஸ்டாப் ப்ரீஸ்ட் கிளினிக்கை நிறுவியுள்ளார்.

உலகம் முழுவதிலும் பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் பலரும் அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் நீடா அம்பானி அவர்கள் மார்பகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்க கூடிய ஒன் ஸ்டாப் ப்ரீஸ்ட் கிளினிக் எனும் சிகிச்சை மையத்தினை நிறுவியுள்ளார். தற்போதைய காலத்தில் அதிக அளவில் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அசௌகரியமான மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்த இரண்டு மணி நேரத்துக்கு உள்ளேயே அறுவை சிகிச்சை அல்லது சிகிச்சை செய்வதற்கான ஒரு மையமாக இந்த மையம் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசியுள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் நீடா அம்பானி, ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவான விலையில் உலகத் தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் எனும் தொலைநோக்கு பார்வையுடன் தான் இதை தொடங்கியுள்ளதாகவும் ஒரு இந்திய குடிமகளாகவும், பெண்ணாகவும் மார்பக பிரச்சினைகளுக்கான இந்த ஒன் ஸ்டாப் ப்ரீஸ்ட் கிளினிக்கை தொடங்கி வைப்பதில் பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்