#Breaking:உக்ரைனில் இருந்து 249 பேருடன் இந்தியா வந்த 5-வது விமானம்!
உக்ரைனில் இருந்து 249 இந்தியர்கள் 5-வது விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த சூழலில்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.அந்த வகையில்,உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க வேண்டும் என டெல்லியில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட நிலையில்,மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்,ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 249 இந்தியர்கள் 5 வது விமானத்தில் டெல்லி வந்தடைந்துள்ளனர்.உக்ரைனில் இருந்து 249 இந்தியர்கள் ருமேனியா வந்த நிலையில்,விமானம் மூலமாக அவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ருமேனியா,ஹங்கேரியில் இருந்து வந்த 5 விமானங்கள் மூலம் இதுவரை மொத்தம் 1156 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
The fifth Operation Ganga flight, carrying 249 Indian nationals stranded in Ukraine, departed from Bucharest (Romania) reaches Delhi airport pic.twitter.com/yKhrI5fmwm
— ANI (@ANI) February 28, 2022