#BREAKING: உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்!

Default Image

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதே மைதானத்தில் உபி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்  யோகி ஆதித்யநாத்.

உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார் யோகி ஆதித்யநாத். லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் ஆளுநர் ஆனந்தி பென படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். லக்னோவில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் இவ்விழாவில் உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வராக கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் பதவியேற்றனர். லட்சக்கணக்கானோர் முன்னிலையில் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார் யோகி ஆதித்யநாத். பதவியேற்பு விழா நடக்கும் மைதானத்தில் இருந்துதான் யோகி ஆதித்யநாத் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.

இதனிடையே, உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இந்த வெற்றியின் மூலம் உத்தரபிரதேசத்தில், 37 வருடங்களுக்கு பின்பு ஒரே கட்சி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. அமித் ஷா தலைமையில் நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பாஜக சட்டமன்ற குழு தலைவராக யோகி ஆதித்யநாத் தேர்வாகியிருந்த நிலையில், இன்று பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்