கர்நாடகா மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவதாக அறிவித்த எடியூரப்பா, அம்மாநில ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
கர்நாடகா மாநிலம் முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்திருந்தார். கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார் எடியூரப்பா.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று அம்மாநில ஆளுநர் தவார் சந்த்யை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை எடியூரப்பா வழங்கினார். பாஜகவில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது கட்சியின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பா ராஜினாமா செய்யக்கூடாது என அவர் சார்ந்த லிங்காய சமுதாய மடாதிபதிகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.
எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அடுத்து முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதில் மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி, சி.டி. ரவி உள்ளிட்டோரில் ஒருவர் கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதல்வராக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் பிஎஸ் சந்தோஷ் என்பவரின் பெயரும் முதல்வர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, தானே முன்வந்து முதல்வர் பதிவில் இருந்து விலகியுள்ளேன். டெல்லியில் இருந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்கவில்லை. என் மீது மதிப்பு வைத்த கர்நாடக மக்களுக்கு சேவையாற்ற 2 ஆண்டுகள் வாய்ப்பளித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…