#BREAKING: XE-என்ற புதிய வகை ஓமைக்ரான் பாதிப்பு! – மும்பை மாநகராட்சி அறிவிப்பு
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒருவருக்கு புதிய வகை ‘ஓமைக்ரான் XE’ பாதிப்பு இருப்பது உறுதியானது.
மும்பையில் ஓமைக்ரான் XE என்ற புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஓமைக்ரான் XE என்ற புதிய வகை வைரசால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சீனாவில் பரவி வரும் புதிய வகை ஓமைக்ரான் பாதிப்பு மும்பையில் ஒருவருக்கு உறுதியானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ‘ஓமைக்ரான் XE’ குறித்து உலக சுகாதார அமைப்பு முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்திருந்தது.
அதாவது, புதிதாக உருமாற்றம் கொண்டிருக்கும் XE-என்ற இந்த வைரஸ் 10 மடங்கு வேகமாக பரவும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது மும்பையில் ஒருவருக்கு உறுதியாகியுள்ளது. ‘ஓமைக்ரான் XE’ என்ற புதிய வகை வைரஸ் வேமாக பரவக்கூடியது என்றும் மும்பை மாநகராட்சி கூறியுள்ளது. இதன்மூலம் இந்தியா தனது முதல் கொரோனா வகை XE நோயை மும்பையில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் முதன்முறையாக ஓமைக்ரான் XE என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.