#BREAKING: தயிர் பாக்கெட்டில் இந்தியில் ‘தஹி’ என்று குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்.!
தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் ‘தஹி’ என அச்சிட வலியுறுத்திய அறிவிக்கையை வாபஸ் பெற்றது இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம்.
தயிர் பாக்கெட்டில் (Dahi) தஹி என இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களில் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. மேலும் அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பாண்ட்லே தயிர் பாக்கெட் மீது அச்சிட FSSAI அறிவுறுத்தி இருந்தது.
இந்த விவகாரம் குறித்து பல அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் ‘தஹி’ என அச்சிட வலியுறுத்திய அறிவிக்கையை இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் FSSAI வாபஸ் பெற்றது. தயிரை தஹி, மொசரூ, ஜாமூத் டவுத், தயிர், பெருகு மாநிலமொழிகளில் எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம் எனவும் அறிவித்துள்ளது.
தஹி அல்ல தயிர் தான்…
தயிர் விற்கப்படும் குடுவைகளில் தஹி என எழுத வேண்டாம். ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு வாபஸ். பணிந்தது #FSSAI #StopHindiImposition pic.twitter.com/RDC3SNA6NB
— தன.அருள்முருகன். (@ArulMur24596015) March 30, 2023
இந்த விவகாரம் குறித்து நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நயவஞ்சகம் வேண்டாம்..தொலைவிடுவீர்கள் என கண்டனம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.