மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு மட்டும் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி, பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, வாக்கு எண்ணிக்கையில் சில சுற்றுகள் முடிந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 202 இடங்களிலும், பாஜக 88 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலை அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்தால் மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜகவை நுழைய விடமாட்டேன் என மம்தா பானர்ஜி சவால் விட்டிருந்தார்.
இதனிடையே, மேற்குவங்க நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் முன்னிலை பெற்று வந்தார்.
இந்த நிலையில், காலையிலிருந்து பின்னணியில் இருந்த மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் முன்னணிக்கு வந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு முன்பு 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்த பாஜக கட்சியின் வேட்பாளர் சுவேந்து அதிகாரி பின்னடைவை சந்தித்துள்ளார்.
தற்போது, நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்று வருகிறார். இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வென்றால், அக்கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…