கேரளா மற்றும் தமிழகத்திற்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு விளக்கம்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டனி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சார்பில் கூறுகையில், கேரளாவின் இடுக்கி பகுதியில் இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக, புதிதாக அணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளதாகவும், இது தொடர்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு நவ.14 ஆம் தேதி, புதிய வழிமுறைகளை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், ஆனால் இதில் முக்கியமான வழிமுறை என்னவென்றால், சுற்றுசூழல் அனுமதி வழங்கப்பட, கேரளா மற்றும் தமிழகத்திற்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசு இதனை எதற்காக எதிர்க்கிறார்கள் எனக் கேட்டதற்கு அணையை ஆய்வு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட குழு, இந்த அணை பாதுகாப்பாக, வலுவாக இருக்கிறது என கூறியுள்ளதால் தான் புதிய வேண்டாமா என கூறுகிறார்கள் என்றும், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் அரசுகள் செயல்பட முடியும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…