#Breaking : மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சத்தீஸ்கரில் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது காலை 8 மணிக்கு மேலும் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சதீஷ்கரில் இன்று முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளன.
பாதுகாப்பு சிக்கல்கள் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள இடங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் இடங்களில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகள் கண்காணிக்கப்படுகின்றன.
மிசோரம் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
40 சட்டப்பேரவை தொகுதிகளில் 1276 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 8.52 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மிசோரமில் 3 ஆயிரம் போலீசாருடன் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 450 குழுக்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025