கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா என்னும் மாணவி இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படிப்பு வந்த நிலையில்,விஸ்மயாவுக்கு (வயது 22) கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமாரோடு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணையாக 100 பவுன் நகை,ஒரு ஏக்கர் நிலம்,ஒரு டொயோட்டா காரை கொடுத்துள்ளனர். ஆனால்,கிரண் தனக்கு கொடுத்த வரதட்சணை போதாது என்றும் மேலும் தரவேண்டும் எனக் கூறி,10 லட்சம் கொடு 20 லட்சம் கொடு என அடிக்கடி விஸ்மயாவை வரதட்சனை கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்த சூழலில்,கடந்த ஆண்டு ஜூன் மாதம் விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதனை அடுத்து விஸ்மயா அப்பா திரிவிக்கிரமன் போலீசில் கிரண் தான் தன் மகளை கொடுமைப்படுத்தி,கொலை செய்து விட்டதாக புகார் அளித்தார்.மேலும் உடலில் மோசமான காயங்கள் இருப்பதால் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது தொடர்பாக வரதட்சனை கொடுமை கொலை வழக்காகவும் பதிவு செய்தனர்.இந்த சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில்,விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண் தான் குற்றவாளி என கேரளாவின் கொல்லம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.மேலும்,தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்தது.இதனையடுத்து,விஸ்மயா தற்கொலை வழக்கில் அவரது கணவர் கிரண்குமாருக்கு என்ன தண்டனை என்று கொல்லம் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளதாகவும்,அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகினது.
இந்த நிலையில்,கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து கேரளா கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,கிரணுக்கு ரூ.12.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,அதில் 2 லட்சத்தை விஸ்மயாவின் பெற்றோருக்கு தரவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…