#breaking: 60 வயதுக்கு மேல் அடுத்த வாரம் முதல் தடுப்பூசி – மத்திய அரசு
அடுத்த வாரம் முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு பெரிய நோய் ஏதேனும் இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டி கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்த வாரம் முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அனுமதி வழங்கி, முதல்கட்டமாக கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.