உத்தராகண்ட் கவர்னர் பேபி ராணி மவுரியா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தார்.
உத்தராகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியுள்ளதாக கவர்னரின் செயலாளர் பி.கே.சாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உத்தராகண்ட் ஆளுநராக மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மவுரியா, ஆக்ரா மேயராக இருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி உத்தராகண்டின் 7வது ஆளுநராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 26-ஆம் தேதி உத்தராகண்டில் உள்ள ராஜ் பவனில் நடந்த விழாவில் அவர் பதவியேற்றார். 2009ல் முதல்வராக இருந்த மார்கரெட் ஆல்வாவுக்குப் பிறகு, உத்தராகண்டின் ஆளுநராக பணியாற்றிய இரண்டாவது பெண்மணி பேபி ராணி மவுரியா ஆனார்.
இதனிடையே, சமீபத்தில் பேபி ராணி மவுரியா டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். பேபி ராணி மவுரியா உபி அரசியலில் தீவிரம் காட்டுவதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் மவுரியா போட்டியிடலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…