#BREAKING: உக்ரைன் – ரஷ்யா போர் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிரதமருடனான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தி இந்தியாவின் நிலைப்பாடு, உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஐநா சபையில் உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து ரஷ்யாவை வலியுத்துமாறு கோரிக்கை வந்த வந்த வண்ணம் உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும் உக்ரைன் தூதர் தெரிவித்தார். பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என நம்புகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் ஆதரவளித்துள்ளது. ஆனால், உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.