உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில் சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.
குறைக்கப்படும் ரூ.200-ஐ எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாக மத்திய அரசே வழங்கும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். எனவே, ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் பரிசாக கூடுதலாக ரூ.200 சிலிண்டர் விலை குறைக்கப்படுகிறது. இதன் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.400 மானியம் வழங்கப்படும் என்றார்.
மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய இலவச இணைப்புகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார். இதனிடையே, நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடி எரிவாயு உள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 32 லட்சம் பேர் சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தபோதும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…