ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மணிஷ் மகேஷ்வரி அமெரிக்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ட்விட்டர் இந்தியாவின் தலைவர் மணீஷ் மகேஸ்வரி அமெரிக்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் அவர் நிறுவனத்தின் வருவாய் வியூகம் மற்றும் செயல்பாட்டுத் துறையில் மூத்த இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
டெல்லியில் கடந்த 1-ஆம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை ராகுல் காந்தி தனது காரில் ஆறுதல் கூறினார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இதனால், தேசிய குழந்தைகள் நல ஆணையம் ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர், காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி மற்றும் அக்கட்சி தலைவர்கள் சிலரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட சர்ச்சைக்கு இடையே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே தங்களின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ட்விட்டர் நிறுவனம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்த நிலையில் இந்திய பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …