#BREAKING : டெல்லியில் முப்படை அதிகாரிகள் அவசர ஆலோசனை..!

Default Image

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற விமானம் விபத்துக்குளாகியுள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து, இந்த விபத்தில் 7 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 4 பேரின உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி பயணம் செய்துள்ளனர். பிபின் ராவத் நிலைமை என்ன என்பது தான் தற்பபோதைய பெரும் கேள்வியாக உள்ளது. விமானம் தரையிறங்க 5 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற விமானம் விபத்துக்குளாகியுள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains