#BREAKING: திரிபுரா மாநில முதலமைச்சர் திடீர் ராஜினாமா!
பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா.
பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் அளித்தார் பிப்லப் குமார் தேப். இதனால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவின் புதிய முதலமைச்சர் தேர்தெடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பிப்லப் குமார் தேப் இளைய தலைவராக இருந்தபோது பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்தார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வந்தார் எனவும் கூறப்படுகிறது. இது அந்த கட்சியின் திரிபுரா மாநில சட்டமனற்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பிப்லப் குமார் தேப் முதலமைச்சராக தொடர கூடாது என்ற கருத்தை கட்சியின் தலைவருக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், இந்த விவரங்களை புரிந்துகொண்ட கட்சியின் தலைமை திரிபுராவில் தற்போது முதலமைச்சரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக பிப்லப் குமார் தேப், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்திருந்த நிலையில், இன்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிப்லப் குமார் தேப் அறிவித்துள்ளார்.