டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து தவறான கருத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தடை.
கடந்த மாதம் 26 ஆம் தேதி டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார். விவசாயி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தான் உயிரிழந்ததாக சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் தெரிவித்தனர்.
இதனால் சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் மீது டெல்லி, நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக டுவிட்டரில் அவதூறு பதிவிட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சசிதரூர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், டெல்லி டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து தவறான கருத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் நபர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…