டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக FIRல் இடம் பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. எஃப் ஐ ஆர்-இல் பெயர் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுக்க டெல்லி காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்யவும் டெல்லி காவல்துறை திட்டம்.
டெல்லியில் நேற்று முன்தினம் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக மாறியது. பின்னர், விவசாயிகள் செங்கோட்டையை முற்றிகையிட்டனர்.
அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகளின் கொடி ஏற்றினர். இதனைத்தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை பலர் மீது FIR பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…