#BREAKING: கடும் போட்டி….மேற்குவங்கத்தில் தொடர் முன்னிலையில் மம்தா!! வெல்ல போவது யார்?

Default Image

மேற்குவங்க மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் தொடர் முன்னிலை வகித்து வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான நேரடிப் போட்டியாகவே இந்த தேர்தல் மாறிவிட்டது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் களத்தில் இருந்தாலும் அவை ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு கணிப்புகள் இல்லை.

இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வென்றால், அக்கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் தடம் பதிக்க பாரதிய ஜனதா கட்சி முயன்று வருகிறது. இந்த நிலையில், இன்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்டத்தில் வெளியாகியிருக்கும் அதிகாரபூர்வமற்ற முன்னிலை நிலவரங்களில் மாநிலத்தில் கடும் போட்டி நிலவுவது தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 147 இடங்களிலும், பாஜக கூட்டணி 116 இடங்களிலும், காங்கிரஸ், சிபிஎம் கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இதில், மற்றவைகள் 3 இடங்களில் முன்னிலை பபெற்று வருகிறது. மேற்கு வங்கம் பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரஸ்க்கும் இடையில் கடுமையான, போட்டி நிலவி வருவதால் முடிவுகள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றன. மேற்கு வங்கம், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்று என்பதும், ஆகையால், யார் அதிகம் எம்.பி.க்களைப் பெறப் போகிறார்கள் என்பதும் ஆகும்.

இதுவரை மேற்குவங்கத்தில் தடம் பதிக்க முடியாத பாஜக, இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பார்க்கிறது. இதனால், மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடி இடையே சில கசப்பான மோதல் நடந்து வருகிறது. ஆகையால், மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு யார் வெல்ல போவது என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்