காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்ததற்கு என்ன காரணம் என விளக்கம் கொடுத்த பிரஷாந்த் கிஷோர்.
தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர், அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, அவரது இல்லத்தில் கிட்டத்தட்ட 4 முறை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது, காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாகவும், 2024-ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்குழு ஒன்றை, நேற்று உருவாக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுருந்தார். இந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக அவரை கட்சியில் கிற அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால், அவர் காங்கிரஸ் கட்சியில் அதிகாரபூர்வமாக சேர மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கனகிராஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், பிரசாந்த் கிஷோர் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், காங்கிரசில் பிரஷாந்த் கிஷோர் இணையாவிட்டாலும், அவர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரஷாந்த் கிஷோர் அவர்கள், கட்சியில் சேரவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்கவும் காங்கிரஸ் விடுத்த அழைப்பை நான் ஏற்கவில்லை. காங்கிரசுக்கு என்னைவிட தலைமையே தேவை. காங்கிரஸ் கட்சிக்குள் அடிப்படை பிரச்சனைகளை சீர்திருத்தங்கள் துணிச்சல் வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சிக்குள் புரையோடியுள்ள அடிப்படை சிக்கல்களை தீர்க்க முன்வர வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…