இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில்,கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று,தமிழகம் தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை.இதன்காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக,மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல் குடிமக்களை கூடுதல் சிரமத்திற்கு மாநில அரசுகள் ஆளாக்குகின்றன என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும்,நமது நாட்டில் வயது வந்தோரில் 96% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதும், 15 வயதுக்கு மேற்பட்ட தகுதியான மக்களில் 85% பேருக்கு இரண்டாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமையளிக்கும் விஷயம் எனவும்,6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும்,அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா பரவலைக் குறைக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…