#BREAKING : இவர்களுக்கு ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம்..!

Default Image

ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனைவரும் தடுப்புச் செலுத்திக் கொள்ளுமாறும், முக கவசம் கட்டாயம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்