#BREAKING : இனிமேல் இந்த குற்றவாளிகள் தப்ப முடியாது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டிஎன்ஏ பரிசோதனையை மட்டும் காரணம்காட்டி பாலியல் குற்றவாளிகள் குற்ற வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
கடந்த 2010-ஆம் ஆண்டு, விராலிமலையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதை செய்தவர், 45 வயதிற்கும் மேற்பட்ட மூக்கன் என்கின்ற முருகன் என்பவர் ஆவார். தனது பக்கத்துக்கு வீட்டில் இருக்க கூடிய சிறுமியை தான் இத்தகைய பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியுளார்.
இதுகுறித்து விராலிமலை காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்திருந்தனர். இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் உயர்நீதிமன்றம் இந்த குற்றத்தை உறுதி செய்திருந்தது. இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமான கருத்தினை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதனை எதிர்த்து முருகன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தான் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ பரிசோதனை, காயம், உள்ளிட்டவை குற்றவாளிக்கு எதிராக உள்ள நிலையில், டிஎன்ஏ பரிசோதனையை மட்டும் காரணம்காட்டி பாலியல் குற்றவாளிகள் குற்ற வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது என நீதிபதிகள் கூறியுள்ள நிலையில், மகிளா நீதிமன்றம் கொடுத்த 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.