நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது.
நாடு முழுவதும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு தற்போது தொடங்கியுள்ளது.
இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியிருக்கும் நீட் தேர்வு மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. கொரோனா தொற்றால் தள்ளிவைக்கப்பட்டு, இன்று மீண்டும் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16.14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ், மலையாளம், பஞ்சாபி, மொழிகள் முதல் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடக்கிறது.
தமிழகத்தில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் இளநிலை நீட் தேர்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 70 ஆயிரம் மாணவிகள், 40 ஆயிரம் மாணவர்கள் என மொத்தம் 1.10 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த ஆண்டில் 19,867 மாணவர்கள் நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்துள்ளனர். புதுச்சேரியில் 14 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 7,123 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவியை 2 பேர் நேற்று இரவு பாலியல்…
சென்னை : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் ஆசையாக நாய் மற்றும் பூனைகள் போன்ற விலங்குகளை வளர்த்து வருவதை ஒரு…