#BREAKING: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கியது!
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது.
நாடு முழுவதும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு தற்போது தொடங்கியுள்ளது.
இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியிருக்கும் நீட் தேர்வு மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. கொரோனா தொற்றால் தள்ளிவைக்கப்பட்டு, இன்று மீண்டும் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16.14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ், மலையாளம், பஞ்சாபி, மொழிகள் முதல் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடக்கிறது.
தமிழகத்தில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் இளநிலை நீட் தேர்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 70 ஆயிரம் மாணவிகள், 40 ஆயிரம் மாணவர்கள் என மொத்தம் 1.10 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த ஆண்டில் 19,867 மாணவர்கள் நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்துள்ளனர். புதுச்சேரியில் 14 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 7,123 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.