#Breaking: இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி.!

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 56 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.
Thank you Delhi for standing up to protect the soul of India!
— Prashant Kishor (@PrashantKishor) February 11, 2020
இதனிடையே ஆம் ஆத்மி ஆட்சி சட்டமன்ற தேர்தலுக்கு ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். டெல்லியில் 3-வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோர் இதுபோன்ற கருத்தை பதிவிட்டுள்ளார். மேலும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பரப்புரை உத்திகளையும், ஆலோசனையும், வகுத்து தந்தார் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025