#Breaking:”நன்றி தமிழகமே;இது மறக்க முடியாதது” – பிரதமர் மோடி!
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார்.அவருக்கு விமான நிலையத்தில்,அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என்.நேரு. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.அதனை தொடர்ந்து,விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ்.அடையாறு தளம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார்.
இதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு வந்தபோது வழியெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனையடுத்து,விழா மேடையில்,பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்தனர்.இதனையடுத்து,ரூ.31,500 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.அப்போது தள்ளி நின்ற முதல்வரை அருகில் அழைத்து அவருடன் இணைந்து நலத்திட்ட உதவிகளை பிரதமர் வழங்கினார்.தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.இதனைத் தொடர்ந்து,பிரதமர் உஅரியாற்றினார்.
இந்நிலையில்,சென்னையில் நேற்று தனக்குஅளிக்கப்பட வரவேற்பை குறிப்பிட்டு பிரதமர் மோடி “நன்றி தமிழகம்” என்று தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: “நன்றி தமிழ்நாடு.நேற்றைய வருகை மறக்க முடியாதது. இதோ சிறப்பம்சங்கள்”,என்று கூறி தனது வருகையின்போது எடுக்கப்பட்ட வீடியோவினை பகிந்துள்ளார்.
Thank you Tamil Nadu! Yesterday’s visit was memorable. Here are the highlights. pic.twitter.com/hKMYDN0McR
— Narendra Modi (@narendramodi) May 27, 2022